மைசூருவுக்கு வரும் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் கிடையாது

தசரா விழாவையொட்டி மைசூருவுக்கு வரும் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளித்து கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
மைசூருவுக்கு வரும் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் கிடையாது
Published on

மைசூரு:

தசரா விழாவையொட்டி மைசூருவுக்கு வரும் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளித்து கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

மைசூரு தசரா விழா

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. தசரா விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் தொடங்கி நடந்து வருகிறது. தசரா விழா நடந்து வருவதால் மைசூரு நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இதனால் கர்நாடகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் மைசூருவில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இதனால் மைசூரு நகரமே மக்கள் கூட்டத்தால் திணறி வருகிறது. இந்த நிலையில் மைசூருவுக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கர்நாடக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சுங்கக்கட்டணம் கிடையாது

அதாவது, தசரா விழாவையொட்டி மைசூருவுக்கு வரும் வாகனங்களுக்கு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் சுங்கக்கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளித்து கர்நாடக அரசு அறிவித்துள்ளது. அதாவது கடந்த 16-ந்தேதியில் இருந்து வருகிற 24-ந்தேதி வரை மைசூருவுக்கு வரும் வாகனங்களுக்கு தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படாது.

இதற்கு சுற்றுலா பயணிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் மைசூருவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com