நோக்கியா ஜி 42 ஸ்மார்ட் போன்

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா ஜி 42 மாடல் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.
நோக்கியா ஜி 42 ஸ்மார்ட் போன்
Published on

இது 6.56 அங்குல ஹெச்.டி. பிளஸ் திரையைக் கொண்டது. இதில் ஆக்டாகோர் ஸ்நாப்டிராகன் பிராசஸர் உள்ளது. 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்டது. வாடிக்கையாளர்கள் விரும்பினால் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடலையும் தேர்வு செய்து கொள்ளலாம்.

இதில் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் பயன்படுத்தப் பட்டுள்ளது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி உடையது. பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமரா, முன்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமரா, பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. இதன் எடை 193 கிராம் மட்டுமே. புளூடூத் இணைப்பு வசதியும் கொண்டது. கிரே, பர்ப்பிள் உள்ளிட்ட கண்கவர் வண்ணங்களில் கிடைக்கும். இதன் விலை சுமார் ரூ.16,999.

X

Daily Thanthi
www.dailythanthi.com