மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி பலி

திருபுவனை அருகே மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி உயிரிழந்தார்.
மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி பலி
Published on

திருபுவனை

திருபுவனை அருகே திருவண்டார்கோவில் தனியார் நிறுவனத்தில் புதிய பிளாண்ட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இங்கு மேற்கூரை அமைக்கும் பணியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ரசனூர் சாம்சச் (வயது 21) என்பவர் ஈடுபட்டார். அப்போது அங்கு பொருத்தப்பட்டிருந்த மின்விளக்கில் அவரது கை பட்டதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருபுவனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com