

சிறுத்தை படத்தில், கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடித்து இருந்தார். அதன் பிறகு, தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் அவர் போலீஸ் அவதாரம் எடுத்து இருக்கிறார். படத்தில், அவருக்கு ஜோடியாக ரகுல் பிரீத்சிங் நடித்து இருக்கிறார். இது வழக்கமான போலீஸ் கதை அல்ல. உங்கள் பக்கத்து வீட்டில் யாராவது போலீஸ் அதிகாரி இருந்தால், அவர் எப்படியிருப்பாரோ, அப்படி ஒரு போலீஸ் அதி காரியாக வருகிறேன் என்கிறார், கார்த்தி.