விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியாகம்

விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியாகம்
விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியாகம்
Published on

காங்கயம்,

தீத்தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு, காங்கயம் தீயணைப்பு நிலையம் சார்பில் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) இளம் செல்வன் தலைமையில் நேற்று காங்கயம் நீதிமன்றத்தில் நீதிபதி மற்றும் வக்கீல்களுக்கும் மற்றும் போலீஸ் நிலையம், பஸ் நிலையம் கரூர் சாலை, திருப்பூர் சாலை உள்ளிட்ட நகரின் மக்கள் அதிக அளவு கூடும் இடங்களில் தீ தடுப்பு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இதில் காங்கயம் தீயணைப்பு நிலைய வீரர்கள் பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கினர். மேலும் இதை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு தீத்தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பொதுமக்களுக்கு தீ தடுப்பு ஒத்திகையும் செய்து காண்பிக்கப்படும் என காங்கயம் தீயணைப்பு நிலைய அலுவலர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com