இனி நிம்மதியாக தூங்கலாம்

இன்று பெரும்பாலானவர்களின் முக்கிய பிரச்சினையே தூக்கமின்மை தான்.
இனி நிம்மதியாக தூங்கலாம்
Published on

எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலை, சோர்வு ஆகிய இரண்டும் தூக்கமின்மையின் முக்கிய அறிகுறிகள். தொடர்ந்து பல நாட்கள் சரியாகத் தூங்கவில்லை என்றால் உடல் பருமன் அதிகரிக்கும். சர்க்கரை நோய், இதயம் சம்பந்தமான நோய்கள் வரும்.

பொதுவாக நீல வண்ணத்தை வெளியிடும் கருவிகள் நம் மூளைக்குள் கதிர்வீச்சுகளைச் செலுத்தி தூக்கத்தைப் பறிக்கின்றன. ஸ்மார்ட்போன், டேப்லெட், கம்ப்யூட்டர் போன்ற எலெக்ட்ரானிக் சாதனங்கள் இந்த நீல வண்ணத்தை வெளியிடுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இன்றைய குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மற்ற சாதனங்களை விட ஸ்மார்ட்போனில்தான் அதிகமாக மூழ்கிக்கிடக்கிறார்கள்.

ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தினால் அன்றைய நாளில் ஒன்றரை மணி நேர தூக்கத்தை நீங்கள் இழக்க நேரிடும். அத்துடன் நீங்கள் தூங்கும் நேரமும் தாமதமாகும். அதனால் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் நேரத்தைக் குறைத்தால் உங்களின் தூக்கப் பிரச்சினையைத் தீர்க்கலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com