கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணிவாய்ப்பு

கூடங்குளத்தில் இயங்கும் அணு உலையில் அப்ரண்டிஸ் அடிப்படையில் பல்வேறு பணி பிரிவுகளில் 183 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணிவாய்ப்பு
Published on

அணுசக்தி கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் (என்.பி.சி.ஐ.எல்) சார்பில் கூடங்குளத்தில் இயங்கும் அணு உலையில் அப்ரண்டிஸ் அடிப்படையில் பணிபுரிய ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிட்டர், மெக்கானிக், வெல்டர், எலெக்ட்ரீஷியன், எலெக்ட்ரானிக் மெக்கானிக், இன்ஸ்ட்ரூமெண்ட் மெக் கானிக் உள்பட பல்வேறு பணி பிரிவுகளில் 183 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

10-ம் வகுப்பு கல்வி தகுதியுடன் ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 31-7-2023 அன்றைய தேதிப்படி 14 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மதிப்பெண் அடிப்படையிலான மெரிட் லிஸ்ட், ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

https://www.npcil.nic.in என்ற இணையத்தின் வழியே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்தப்பின் அதனை பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து, 'முதுநிலை மேலாளர், எச்.ஆர் பிரிவு, கூடங்குளம் அணுமின் திட்டம், கூடங்குளம் அஞ்சல், ராதாபுரம் தாலுகா, திருநெல்வேலி-627106' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31-7-2023

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com