3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

புதுவை துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
Published on

புதுச்சேரி

தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவியது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று காலை நிலவரப்படி காரைக்காலில் இருந்து கிழக்கு-வடகிழக்கே சுமார் 490 கி.மீ. தூரத்திலும், சென்னையில் இருந்து கிழக்கே 400 கி.மீ. தொலைவில் இருந்தது.

இது அடுத்த 48 மணி நேரத்தில் தெற்குஆந்திரா நோக்கி நகர்ந்து நாளை (புதன்கிழமை) காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதன் காரணமாக 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று புதுச்சேரி துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதன் மூலம் திடீர் காற்றோடு மழை பெய்யும் நிலை என துறைமுகத்துக்கு எச்சரிக்கை விடுப்பது ஆகும்.

இந்த எச்சரிக்கையை தொடர்ந்து புதுவையில் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com