

புதுச்சேரி
புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 954 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 83 பேருக்கு தொற்று உறுதியானது. அதில் 69 பேர் புதுச்சேரியையும், தலா 7 பேர் காரைக்கால், ஏனாமை சேர்ந்தவர்கள் ஆவர்.
இன்று 85 பேர் குணமடைந்த நிலையில் குருசுக்குப்பத்தை சேர்ந்த 78 வயது மூதாட்டி கொரோனாவுக்கு பலியானார். இதனால் புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,980 ஆக உயர்ந்துள்ளது. தற்போது ஆஸ்பத்திரிகளில் 19 பேர், வீடுகளில் 481 பேர் என 500 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். புதுவையில் தொற்று பரவல் 8.70 சதவீதமாகவும் குணமடைவது 98.60 சதவீதமாகவும் உள்ளது.