கொரோனாவுக்கு முதியவர் பலி

புதுச்சேரியில் புதிதாக 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இ்ன்று கொரோனாவுக்கு முதியவர் பலியானார்.
கொரோனாவுக்கு முதியவர் பலி
Published on

புதுச்சேரி

புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 413 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 43 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. நேற்று 54 பேர் குணமடைந்தனர். தற்போது ஆஸ்பத்திரிகளில் 3 பேர், வீடுகளில் 431 பேர் என 434 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 85 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1974 ஆக உயர்ந்துள்ளது.

புதுவையில் தொற்று பரவல் 10.41 சதவீதமாகவும், குணமடைவது 96.62 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முதல் தவணை தடுப்பூசியை 46 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 633 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 1,624 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 22 லட்சத்து 7 ஆயிரத்து 648 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com