மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியானார்.
மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
Published on

கிருஷ்ணராயபுரம்,

கிருஷ்ணராயபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முதியவர் ஆச்சி (வயது 76). இவர் நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணராயபுரம் கள்ளுக்கடை பாலம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக முதியவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் முதியவர் ஆச்சி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com