பங்குனி அமாவாசையையொட்டிகோவில்களில் சிறப்பு பூஜை

பங்குனி அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
பங்குனி அமாவாசையையொட்டிகோவில்களில் சிறப்பு பூஜை
Published on

பங்குனி மாத அமாவாசையையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. பங்குனி மாதம் என்பதால் குறிப்பாக அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பண்ணாரி மாரியம்மன் கோவில், சென்னிமலை முருகன் கோவில், பவானி சங்கமேஸ்வரர், கொடுமுடி மகுடேஸ்வரர், கோபி வடக்கு வீதியில் உள்ள முத்து மாரியம்மன், ஊஞ்சலூர் மாரியம்மன் கோவில்களில் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். சாமிகளுக்கும், அம்மன்களுக்கும் அமாவாசையையொட்டி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com