சேலத்தில் லாரி மோதி மூதாட்டி சாவு

சேலத்தில் லாரி மோதி மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
சேலத்தில் லாரி மோதி மூதாட்டி சாவு
Published on

சேலம்,

சேலம் கந்தம்பட்டி பகுதியில் 70 வயது மூதாட்டி ஒருவர் சாலையை கடந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த லாரி, மூதாட்டி மீது மாதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com