

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தொற்று பாதிப்புடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திண்டுக்கல் பகுதியை சேர்ந்த 54 வயது ஆண் நேற்று சிகிச்சை பலனின்றி பலியானார். இதன் மூலம் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 659 ஆக உயர்ந்தது. இதற்கிடையே நேற்று 20 பெண்கள் உள்பட மேலும் 113 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகள், சிறப்பு சிகிச்சை மையங்கள் ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் 152 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நேற்றைய நிலவரப்படி 1,564 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.