புதுக்கோட்டையில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி

கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியானார்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை
Published on

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 770 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சையில் இருந்து 41 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 996 ஆக உயர்ந்தது. கொரோனாவுக்கு தற்போது 422 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியாகினர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 352 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com