கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி

புதுச்சோயில் கொரோனாவுக்கு 45 வயதானவர் உயிரிழந்தனர்.
கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி
Published on

புதுச்சேரி

கொரோனா தொற்றுக்கு மேலும் ஒருவர் பலியானார். 56 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது.

56 பேர் பாதிப்பு

புதுவையில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையிலும் அவ்வப்போது உயிரிழப்புகள் ஏற்பட்டு பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இன்றும் ஒருவர் பலியாகி உள்ளார். இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 954 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 56 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.

அதில் 46 பேர் புதுச்சேரியையும், 7 பேர் காரைக்காலையும், 2 பேர் ஏனாமையும், ஒருவர் மாகியையும் சேர்ந்தவர்கள் ஆவர். இன்று 97 பேர் குணமடைந்தனர்.

மேலும் ஒருவர் பலி

புதுவை சோரப்பட்டை சேர்ந்த 45 வயதான ஒருவர், நெஞ்சகநோய் மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலனின்றி உயிரிழந்தார். இதனால் புதுவையில் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,981 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது ஆஸ்பத்திரிகளில் 23 பேர், வீடுகளில் 368 பேர் என 391 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். புதுவையில் தொற்று பரவல் 4.93 சதவீதமாகவும், குணமடைவது 98.66 சதவீதமாகவும் உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com