புதுச்சத்திரம் வட்டாரத்தில் வெங்காயம் பயிருக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம்-தோட்டக்கலை உதவி இயக்குனர் தகவல்

புதுச்சத்திரம் வட்டார விவசாயிகள் வெங்காயம் பயிருக்கு காப்பீடு செய்யலாம் என தோட்டக்கலை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
புதுச்சத்திரம் வட்டாரத்தில் வெங்காயம் பயிருக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம்-தோட்டக்கலை உதவி இயக்குனர் தகவல்
Published on

நாமக்கல்:

காப்பீடு

புதுச்சத்திரம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் பால்ஜாஸ்மீன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் 2021-2022-ல் புதுச்சத்திரம் பிர்காவில் வெங்காயம் பயிர் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி கடன் பெறும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட வங்கிகளில் தங்களின் சுய விருப்பத்தின்பேரில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பதிவு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தில் ஒரு ஏக்கர் வெங்காய பயிருக்கு ரூ.1,920-ஐ கடைசி நாளான நவம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம்.

விண்ணப்பம்

பயிர் காப்பீடு செய்யும் முன்பு முன்மொழிவு விண்ணப்பத்துடன் கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல், விதைப்பு சான்று, செயல்பாட்டில் உள்ள வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டணத்தை பொது சேவை மையங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் செலுத்தலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com