ஓப்போ ரெனோ 10 அறிமுகம்

ஓப்போ ரெனோ 10 அறிமுகம்
Published on

ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் ஓப்போ நிறுவனம் புதிதாக ரெனோ 10 என்ற பெயரிலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது 6.7 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் அமோலெட் திரையைக் கொண்டுள்ளது. முன்புறம் 32 மெகா பிக்ஸெல் கேமரா மற்றும் 64 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட போர்ட்ரெய்ட் கேமராவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை சுமார் ரூ.32,999.

இதில் ஆக்டாகோர் மீடியாடெக் டைமென்சிடி பிராசஸர் பயன்படுத்தப் பட்டுள்ளது. 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவகம் கொண்ட இதன் நினை வகத் திறனை எஸ்.டி. கார்டு மூலம் அதிகரித்துக் கொள்ளும் வசதி உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளமும், திரையிலேயே விரல் ரேகை உணர் சென்சாரும் உள்ளது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 67 வாட் சூப்பர் வூக் சார்ஜருடன் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.32,999.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com