ஆப்டோமெட்ரி படிப்பும், வழிகாட்டுதலும்...!

மருத்துவத்தில் பல துறைகள் உள்ளன. அதில் கண் சார்ந்த துறையில் நாம் அதிகம் அறிந்திராத படிப்புகளுள் ஆப்டோமெட்ரி எனும் படிப்பும் ஒன்று. இது கண் மற்றும் பார்வை பராமரிப்பைக் கையாளும் விதம் பற்றிய படிப்பாகும்.
ஆப்டோமெட்ரி படிப்பும், வழிகாட்டுதலும்...!
Published on

கண் சார்ந்த நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து அவற்றிற்கான சிகிச்சை அளிப்பது இதன் நோக்கமாகும். மேலும் இந்தியாவில் கிட்டப்பார்வை மற்றும் பார்வை பிரச்சினை அதிகரித்து வருவதால் ஆப்டோமெட்ரியின் தேவை அதிகரித்திருக்கிறது. நீரிழிவு மற்றும் தமனிகளில் ஏற்படும் நோய்களால் கண்களில் ஏற்படும் மாற்றங்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது இவர்களின் பணியாகும். இதற்கான படிப்பினை தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் வழங்குகிறது. நான்கு வருடம் (6 செமஸ்டர்கள் தியரி முறையிலும், 2 செமஸ்டர் பயிற்சி வகுப்பு) இந்த படிப்பின் கால அளவாகும். 17 வயது நிரம்பிய, பன்னிரெண்டாம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடப்பிரிவு களில் 65 சதவீதம் மதிப்பெண் எடுத்த மாணவர்கள் இந்த படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

tnmgrmu.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து ஆயிரம் ரூபாய் விண்ணப்பக் கட்டணத்துடன் டி.டி அல்லது ஆன்லைன் பணப்பரிமாற்றம் செய்து கொள்ளலாம். இந்த படிப்பிற்கு 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு விண்ணப்பத்தினை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். நான்கு வருட படிப்பு முடித்த மாணவர்கள் கண் மருத்துவ உதவியாளர்களாக கருதப்படுவர். மேலும் ஆரம்ப சுகாதார நிறுவனங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பு கொட்டி கிடக்கிறது.

அரசுத்துறையில் ஆயதப்படைகள், பொது சுகாதார மையத்திலும், பெருநிறுவனங்களில் கண் தொடர்பான தயாரிப்புகளிலும், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் மற்றும் உதவி ஆலோசகர், மருத்துவமனைகளிலும், ஆப்டிக்கலிலும் லென்ஸ் பொருத்துவது போன்ற பல வேலைவாய்ப்புகள் உள்ளன. மேலும் கிழக்கு, மத்திய கிழக்கு நாடுகளிலும் இதற்கான வேலைவாய்ப்பு கொட்டி கிடக்கின்றன.

17 வயது நிரம்பிய, பன்னிரெண்டாம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடப் பிரிவுகளில் 65 சதவீதம் மதிப்பெண் எடுத்த மாணவர்கள் இந்த படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com