யுவன் சங்கர் ராஜா-சந்தோஷ் நாராயணனுடன் அசல் கோலார்.. புகைப்படம் வைரல்

அசல் கோலார், லியோ படத்தில் இடம்பெற்ற "நா ரெடி" பாடலில் ராப் வரிகளை எழுதி பாடியிருந்தார். இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
யுவன் சங்கர் ராஜா-சந்தோஷ் நாராயணனுடன் அசல் கோலார்.. புகைப்படம் வைரல்
Published on

தமிழ் திரையுலகில் பாடகர், ராப் பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர் அசல் கோலார். இவர் பேச்சுலர், பாரிஸ் ஜெயராஜ், மகான், குலு குலு, காஃபி வித் காதல் உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல்கள் எழுதியும் பாடியும் உள்ளார். இவர் தனியிசை பாடலாக பாடிய "ஜோர்த்தல" பாடல் பலரை கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்தது. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமடைந்தார். சில தினங்களுக்கு முன்பு வெளியான விஜய்யின் "லியோ" படத்தில் இடம்பெற்ற "நா ரெடி" பாடலில் இடம்பெற்ற ராப் வரிகளை எழுதி பாடியிருந்தார். இந்த பாடல் தற்போது வரை இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

இந்நிலையில் அசல் கோலார் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்படி இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா மற்றும் சந்தோஷ் நாராயணனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை புகைப்படத்தை பலரும் வைரலாக்கி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com