திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 7-ந்தேதி நடக்கிறது.
திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Published on

திருத்தணி,

திருத்தணி முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். 12 நாட்கள் நடக்கும் இவ்விழாவில் புலி வாகனம், வெள்ளி மயில் வாகனம், சிங்க வாகனம், ஆட்டுக்கிடா வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் காலை, இரவு என இரு வேளைகளில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

அந்த வகையில், இந்த ஆண்டிற்கான சித்திரை பெருவிழா நேற்று காலை 4:30 மணி முதல் 6 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக உற்சவர் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் எதிரே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து வள்ளி, தெய்வானையுடன் முருகபெருமான் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதியில் உலா வந்தார். விழாவை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் பொது வழியில் 3 மணி நேரம் கொளுத்தும் வெயிலில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகின்ற 7-ந்தேதியும், 8-ந்தேதி தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. 10-ந்தேதி கொடி இறக்கம், தீர்த்தவாரியுடன் சித்திரை பெருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை முருகன் கோவில் இணை ஆணையர் ரமணி, அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன் மற்றும் அறங்காவலர்கள் செய்துவருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com