சூரிய ஒளி வீசும் சிவன் கோவில்

அம்ருதாபுரா அம்ருதேஸ்வரா கோவிலில் ரத சப்தமி அன்று சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி வீசுகிறது.
சூரிய ஒளி வீசும் சிவன் கோவில்
Published on

ஒவ்வொரு ஆண்டும் ரத சப்தமி அன்று சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி வீசுகிறது. இத்தகைய அதிசயம் நிகழ்வது, அம்ருதாபுரா அம்ருதேஸ்வரா கோவிலில் தான். இது சிக்மகளூரு மாவட்டம் தரிகெரேயில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

கி.பி.1196-ம் ஆண்டு ஒய்சாலா மன்னர் அமித்தையா என்பவரால், அழகிய சிற்பக்கலையுடன் இக்கோவில் கட்டப்பட்டது. கிழக்கு முகம் நோக்கி அமையப் பெற்றுள்ள இந்தக் கோவிலின் நடுவில் சிவன் சன்னிதியும், வலதுபக்கம் விஷ்ணு சன்னிதியும், இடதுபக்கம் பிரம்மன் சன்னிதியும் உள்ளன. கோவில் கருவறையில் குடிகொண்டிருக்கும் சிவன் சிலை மிகவும் பிரசித்திப்பெற்றது ஆகும். அதாவது அக்னி சிவன் எனப்படும் இந்த சிவன் சிலை, மும்மூர்த்திகளின் சக்தி அடங்கியது என கூறப் படுகிறது. இந்த சிவன் சிலையானது நேபாளத்தில் உள்ள கன்டக்கி நதியில் இருந்து கொண்டு வரப்பட்டு, சங்கராந்தி (பொங்கல்) அன்று பிரதிஷ்டை செய்யப்பட்டதாக தல வரலாறு சொல்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com