பகவான் கிருஷ்ணர்- அனுமன் ஒற்றுமைகள்

பகவான் கிருஷ்ணர் கீதா உபதேசத்தை அனுமனின் முன்பாக அர்ச்சுனருக்கு கூறினார்.
பகவான் கிருஷ்ணர்- அனுமன் ஒற்றுமைகள்
Published on

பகவான் மகாவிஷ்ணுவின் ராமாவதாரத்தில் மட்டுமின்றி கிருஷ்ணாவதாரத்திலும் அனுமன் சேவை செய்து பகவானின் பரிபூரண அன்பை பெற்றுள்ளார். பகவான் கிருஷ்ணர் கேட்டுக்கொண்டதற்கிணங்க குருசேத்திரப் போரில் அர்ச்சுனனின் தேரின் மீது கொடியாக வீற்றிருந்தது அனுமனே. அந்த வகையில் அனுமனின் முன்பாகத்தான், கீதா உபதேசத்தை அர்ச்சுனருக்கு கிருஷ்ணர் கூறினார்.

கிருஷ்ணருக்கும், அனுமனுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. குருசேத்திர போரின்போது, அர்ச்சுனனின் சாரதியாக கிருஷ்ணர் இருந்தார். அதே போல் அவனது தேரில் கொடியாக அனுமன் இருந்தார்.

பாண்டவர்களுக்காக கவுரவர்களிடம் கிருஷ்ணர் தூது சென்றார். இதேபோல் ராமருக்காக, ராவணனிடம் தூது சென்றவர் அனுமன். கிருஷ்ணர் கோவர்த்தன மலையைத் தூக்கி கோகுல மக்களை காத்து நின்றார். அனுமனோ சஞ்சீவி மலையை தூக்கி வந்து லட்சுமணனை காத்தார். எல்லாவற்றுக்கும் மேலாக விஸ்வரூபம் தந்த தெய்வங்களின் பட்டியலில் கிருஷ்ணருக்கும் அனுமனுக்கும் இடமுண்டு.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com