இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம்.
இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
Published on

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, மாசி 11 (வெள்ளிக்கிழமை)

பிறை: வளர்பிறை

திதி: சதுர்த்தசி மாலை 4.20 மணிக்கு மேல் பிறகு பவுர்ணமி

நட்சத்திரம்: ஆயில்யம் இரவு 8.06 மணிக்கு மேல் மகம்

யோகம்: மரணயோகம்

ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை

எமகண்டம்: மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை

சூலம்: மேற்கு

நல்ல நேரம்: காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை

முக்கிய நிகழ்வுகள்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம். பெருவயல் உள்ளிட்ட முருகன் தலங்களில் தேரோட்டம். திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கஜேந்திரமோட்சம். மதுரை கூடலழகர் பவனி.

ராசிபலன்

மேஷம்

சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். விலகிச்சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். வீடு, வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். செல்வாக்கு உயரும். உறவினர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

ரிஷபம்

தடைகள் அகலும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். உத்தியோகத்தில் தற்காலிகப்பணி நிரந்தரப்பணியாக மாறும்.

மிதுனம்

யோகமான நாள். இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். செய்தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.

கடகம்

அடிப்படை வசதிகளை பெருக்கிக்கொள்ளும் நாள். ஆக்கபூர்வமான செயலொன்றை செய்து முடிப்பீர்கள். சமுதாயப் பணியில் அதிக ஆர்வம் கூடும். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

சிம்மம்

சச்சரவுகள் அகலும் நாள். வெளியுலகத் தொடர்பு விரிவாகும். தொழில் முன்னேற்றத்திற்கு மாற்று இனத்தவர் ஒத்துழைப்பு உண்டு. உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

கன்னி

கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் நாள். பணவரவு போது மானதாக இருக்கும். பக்கபலமாக இருப்பவர்கள் எண்ணிக்கை உயரும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சி வெற்றி பெறும்.

துலாம்

அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். உடல்நலம் சீராகும். தொழில் ரீதியாக பயணமொன்று ஏற்படலாம். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.

விருச்சிகம்

அதிர்ஷ்ட வாய்ப்புகள் அரங்கேறும் நாள். பயணங்களால் பலன் உண்டு. நண்பர்கள் பணத் தேவைகளை பூர்த்தி செய்வர். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்.

தனுசு

மருத்துவ செலவுகளால் மனக் கலக்கம் ஏற்படும் நாள். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. வீண் விரயங்கள் அதிகரிக்கும். பக்கத்தில் உள்ளவர்களின் ஆதரவு குறையும்.

மகரம்

உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள். கல்யாண வாய்ப்புகள் கைகூடுவதற்கான அறிகுறிகள் தோன்றும். நினைத்த காரியம் நினைத்தபடியே நடைபெறும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

கும்பம்

தைரியத்தோடு செயல்இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்பட்டு சாதனை படைக்கும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணத் தேவைகள் பூர்த்தியாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.

மீனம்

பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணைபுரியும். நீண்ட நாட்களாக நிலவிய கடன் தொல்லை அகலும், முக்கிய வேலைகளை செய்து முடிப்பீர்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com