ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் ‘சுமோ’

கொரோனாவால் திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதை தொடர்ந்து திரைக்கு வர தயாராக இருந்த படங்களை ஓ.டி.டி, தளத்தில் வெளியிட முயற்சிகள் நடக்கின்றன.
ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் ‘சுமோ’
Published on

தனுசின் ஜெகமே தந்திரம் படம் அடுத்த மாதம் ஓ.டி.டி.யில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர்.

இதுபோல் விஜய்சேதுபதியின் துக்ளக் தர்பார், நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண், திரிஷாவின் ராங்கி ஆகிய படங்களை ஓ.டி.டி.யில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. இந்த நிலையில் சுமோ படம் ஓ.டி.டி.யில் வெளியாவது உறுதியாகி உள்ளது.

இந்த படத்தில் சிவா கதாநாயகனாகவும், பிரியா ஆனந்த் நாயகியாகவும் நடித்துள்ளனர். யோகிபாபு, வி.டி.வி. கணேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹோசிமின் இயக்கி உள்ளார்.

மல்யுத்த வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது. மல்யுத்த வீரர் யோஷினோரி தாஷிரோவும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். பெரும்பகுதி படப்பிடிப்பு ஜப்பானில் நடந்துள்ளது. ஏற்கனவே சூரரை போற்று, மூக்குத்தி அம்மன், க.பெ.ரணசிங்கம், பென்குயின், பரமபதம் விளையாட்டு, பூமி, டெடி, மாறா, நிசப்தம், டேனி, லாக்கப் ஆகிய படங்கள் ஓ.டி.டி.யில் வந்துள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com