அயோத்தி ராமர் கோவிலில் 5.5 கோடி பேர் சாமி தரிசனம்

ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை கடந்த ஆண்டு ஜனவரி 22ம் தேதி நடைபெற்றது.
அயோத்தி ராமர் கோவிலில் 5.5 கோடி பேர் சாமி தரிசனம்
Published on

லக்னோ,

உத்தரபிரதேசம் அயோத்தியில் இந்து மத கடவுள் ராமர் கோவில் உள்ளது. இந்த கோவில் பிராண பிரதிஷ்டை கடந்த ஆண்டு ஜனவரி 22ம் தேதி நடைபெற்றது. இதனை தொடர்ந்து ராமர் கோவிலில் வழிபாடு செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து தினமும் ஆயிரக்கணக்கானோர் அயோத்தி ராமர் கோவில் சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பிராண பிரதிஷ்டை நடைபெற்ற 2025 ஜனவரி 22ம் தேதி முதல் தற்போதுவரை அயோத்தி ராமர் கோவிலில் 5 கோடியே 50 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளதாக உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது.

பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டப்பின் அரசியல்வாதிகள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள், பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கோவில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com