மீண்டும் காதலில் ஓவியா?

தமிழில் களவாணி படத்தில் கதாநாயகியாக அறிமுகமான ஓவியாவுக்கு நிறைய படங்கள் குவிந்தன. மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
மீண்டும் காதலில் ஓவியா?
Published on

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில் சக போட்டியாளர் ஆரவ்வுடன் ஓவியாவுக்கு காதல் மலர்ந்தது. இதனை வெளிப்படையாக அறிவித்தார். ஆனால் ஓவியாவின் காதலை ஆரவ் நிராகரித்ததால் அங்குள்ள நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாக பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பிக்பாஸ் அரங்கில் போலீசார் நுழைந்து விசாரணை நடத்திய சம்பவமும் நடந்தது. பிக்பாஸ் முடிந்த பிறகு ஓவியாவுக்கும் ஆரவ்வுக்கும் மீண்டும் நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் ஜோடியாக சுற்றினார்கள். அதன்பிறகு பிரிந்து விட்டனர். ஆரவ் நடிகை ராஹியை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தற்போது இளைஞர் ஒருவரின் தலையில் முத்தமிடும் புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் ஓவியா வெளியிட்டுள்ளார். அதற்கு காதல் என்ற தலைப்பையும் பதிவு செய்துள்ளார். அந்த இளைஞரை ஓவியா காதலிப்பதாக தகவல் பரவியுள்ளது. அவர் உங்கள் காதலரா என்று வலைத்தளத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஓவியாவுக்கு சிலர் வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com