முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

பால்குட ஊர்வலத்தைத் தொடர்ந்து உச்சிக்கால பூஜையும், மாலையில் தீர்த்தவாரியும் நடந்தது.
முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
Published on

முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவில் திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 8-ம் திருநாளான நேற்று காலை சிறப்பு பூஜையும், அதனை தொடர்ந்து பகல் பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து பால்குட ஊர்வலம் நடைபெற்றது. முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து நகரை வலம் வந்து முத்துமாலையம்மன் கோவிலை வந்தடைந்தனர். பின்னர் உச்சிக்கால பூஜை, அன்னதானம் நடைபெற்றது.

மாலையில் தீர்த்தவாரி நடந்தது. இதில் 800-க்கும் மேற்பட்ட பெண்கள் பூந்தட்டு ஏந்தி ஊர்வலமாக வந்து, அம்மன் சப்பரம் எழுந்தருளும் வளாகத்தை வந்தடைந்தனர். இரவில் அம்மன் சப்பர பவனி, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 16-ந்தேதி வரை திருவிழா நடைபெறுகிறது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com