பாராளுமன்றம் முடக்கம்: பிரதமர் மோடி, ராகுல்காந்தி மீது உத்தவ் தாக்கரே தாக்கு

புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டு தடை விவகாரம் பாராளுமன்றத்தில் கடுமையாக எதிரொலித்தது. இதனால், பாராளுமன்ற செயல்பாடு முடங்குவதை சுட்டிக்காட்டி, பிரதமர் மோடியையும், ராகுல்காந்தியையும் உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்தார். மாற்று கட்சியினர் இணைந
பாராளுமன்றம் முடக்கம்: பிரதமர் மோடி, ராகுல்காந்தி மீது உத்தவ் தாக்கரே தாக்கு
Published on

மும்பை,

புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டு தடை விவகாரம் பாராளுமன்றத்தில் கடுமையாக எதிரொலித்தது. இதனால், பாராளுமன்ற செயல்பாடு முடங்குவதை சுட்டிக்காட்டி, பிரதமர் மோடியையும், ராகுல்காந்தியையும் உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்தார்.

மும்பையில் வசிக்கும் குஜராத் மாநிலத்தை சேர்ந்த பாரதீய ஜனதா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் அக்கட்சிகளில் இருந்து விலகி நேற்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முன்னிலையில், சிவசேனாவில் இணைந்தனர்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, உத்தவ் தாக்கரே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கருப்பு பண விவகாரத்தால் பாராளுமன்ற செயல்பாடு பாதிக்கப்படுவதை சுட்டிக்காட்டி, பிரதமர் மோடியையும், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தியையும் கடுமையாக விமர்சித்தார். உத்தவ் தாக்கரே கூறியதாவது:

பாராளுமன்றத்தில் தன்னை பேச அனுமதிக்கவில்லை என்று ராகுல்காந்தி ஒருபக்கம் சொல்கிறார். மறுபக்கம் பிரதமர் நரேந்திர மோடியும் இதே குற்றச்சாட்டை முன்வைக்கிறார். ஆனால், நாட்டு மக்கள் மிகவும் தெளிவானவர்கள். யார் எதை பேசுகிறார்கள் என்பதை பொதுமக்கள் உன்னிப்பாக கவனிக்கிறார்கள்.

குஜராத் சமூகத்தினர் எப்போதும் உபயோகித்து தூக்கி எறியப்படும் மனப்பாங்குடன் நடத்தப்பட்டு வருகின்றனர். அவர்கள் சிவசேனாவுடன் இணைந்து நடைபோட வேண்டும் என்று பால்தாக்கரே அடிக்கடி சொல்வார். பா.ஜனதாவை போல் இன்றி, குஜராத் சமூகத்தினரை நீண்ட வரிசையில் சிவசேனா நிற்க விடாது.

இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com