மக்களை வியப்பில் ஆழ்த்திய கேரள முன்னாள் நிதி மந்திரியின் சொத்து மதிப்பு - எவ்வளவு தெரியுமா?


மக்களை வியப்பில் ஆழ்த்திய கேரள முன்னாள் நிதி மந்திரியின் சொத்து மதிப்பு - எவ்வளவு தெரியுமா?
x

கேரள முன்னாள் நிதி மந்திரியின் சொத்து மதிப்பு மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் பத்தனம்திட்டா நாடாளுமன்ற தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முன்னாள் நிதி மந்திரி தாமஸ் ஐசக் போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் தற்போது எம்.பி.யாக இருக்கும் ஆன்றோ ஆன்றனியும், பா.ஜனதா சார்பில் அனில் ஆன்றனியும் போட்டியிடுகிறார்கள்.

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் நிதி மந்திரி தாமஸ் ஐசக் தேர்தல் அதிகாரியான மாவட்ட கலெக்டரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் தனது வேட்புமனுவுடன் தாக்கல் செய்த சொத்து விவர பட்டியல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது ரூ.9.6 லட்சம் மதிப்பிலான 20 ஆயிரம் புத்தகங்கள் மட்டுமே கைவசம் இருப்பதாகவும், சொந்தமாக வீடு மற்றும் நிலபுலங்கள் எதுவும் இல்லை எனவும் அவர் தாக்கல் செய்த சொத்து விவர பட்டியலில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

கேரளாவில் பல முறை நிதி மந்திரியாக இருந்த போதிலும் தனக்கென்று தனியாக நிதியை (சொத்தை) சேர்த்துக்கொள்ளாமல், அறிவை (புத்தகங்களை) மட்டும் சொத்தாக பாதுகாத்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் தாமஸ் ஐசக்கை அனைவரும் வியந்து பாராட்டி வருகிறார்கள்.


Next Story