'இந்தியா' கூட்டணி இந்துக்களுக்கும், ராமருக்கும் எதிரானது - யோகி ஆதித்யநாத்


இந்தியா கூட்டணி இந்துக்களுக்கும், ராமருக்கும் எதிரானது - யோகி ஆதித்யநாத்
x

Image Courtesy : ANI

'இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்தவர்கள் இந்துக்களுக்கும், ராமருக்கும் எதிரானவர்கள் என யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

லக்னோ,

காங்கிரஸ், சமாஜ்வாடி, தி.மு.க. உள்பட 'இந்தியா' கூட்டணியைச் சேர்ந்தவர்கள் அனைவரும் இந்து மதத்திற்கும், சனாதன தர்மத்திற்கும், கடவுள் ராமரின் கொள்கைகளுக்கும் எதிரானவர்கள் என உத்தர பிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"காங்கிரஸ் கட்சி, சமாஜ்வாடி கட்சி, ராஷ்டிரிய ஜனதாதளம் அல்லது தி.மு.க. என 'இந்தியா' கூட்டணியில் இருக்கும் அனைவரும் கடவுள் ராமரின் இருப்பையும், அவரது தெய்வீக சக்தியையும் கேள்வி எழுப்பக் கூடியவர்கள். அவர்கள் இந்தியாவின் நம்பிக்கைக்கும், தேசத்தின் நாயகர்களுக்கும் மதிப்பளிப்பார்கள் என்று நம்புவது வீணாகும்.

அவர்கள் இந்து மதத்திற்கும், சனாதன தர்மத்திற்கும் எதிரானவர்கள். பயங்கரவாதத்தை ஆதரித்து, கடவுள் ராமரின் கொள்கைக்கு எதிராக செயல்படக் கூடியவர்கள். காங்கிரஸ் மற்றும் 'இந்தியா' கூட்டணியைச் சேர்ந்தவர்கள் நீண்ட காலமாக அயோத்தி ராமர் கோவில் கட்டுமானத்திற்கு தடையாக இருந்து வந்தார்கள்.

ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்டது. இன்று உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தி ராமர் கோவிலுக்கு வருகை தருகிறார்கள். ஆனால் 'இந்தியா' கூட்டணியைச் சேர்ந்தவர்கள் எப்போதும் ராமரை எதிர்ப்போரைச் சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்."

இவ்வாறு யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

1 More update

Next Story