பரமக்குடியில் ஜே.பி.நட்டா இன்று வாகன பேரணி


பரமக்குடியில் ஜே.பி.நட்டா இன்று வாகன பேரணி
x

பரமக்குடியில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று வாகன பேரணி செல்கிறார்.

பரமக்குடி,

தமிழகத்தில் இன்னும் 3 நாட்களில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. நாளையுடன் பிரசாரமும் முடிவடையும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள், தங்கள் கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிடும் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று (செவ்வாய்க்கிழமை) பரமக்குடியில் வாகன பேரணி செல்கிறார்.

இதற்காக ஹெலிகாப்டர் மூலம் பரமக்குடி வரும் ஜே.பி.நட்டா, சரஸ்வதி நகரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்தில் வந்திறங்குகிறார். பின்பு அங்கிருந்து வாகன பேரணியாக காந்தி சிலையை வந்தடைகிறார். பின்னர் காந்தி சிலை அருகே திறந்த வேனில் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து பேசுகிறார். ஜே.பி.நட்டா வருகையையொட்டி பரமக்குடி பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story