நாடாளுமன்றத் தேர்தல்: காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 9 தொகுதிகளுக்கு பார்வையாளர்கள் நியமனம்

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 9 தொகுதிகளுக்கு பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 9 தொகுதிகளுக்கும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, நெல்லைக்கு மூத்த தலைவர் கே.வி.தங்கபாலு, கடலூர் தொகுதிக்கு முன்னாள் எம்.பி., கிருஷ்ணசாமி, மயிலாடுதுரைக்கு முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி, விருதுநகர் தொகுதிக்கு முன்னாள் எம்.எல்.ஏ., கே.ஆர்.ராமசாமி,

கன்னியாகுமரி முன்னாள் எம்.பி., ராமசுப்பு, கிருஷ்ணகிரி தொகுதிக்கு பொதுச்செயலாளர் தனிகாச்சலம் மற்றும் கோபி, சிவகங்கைக்கு மாநில துணைத் தலைவர் கந்தசாமி, கரூர் தொகுதிக்கு துணைத் தலைவர் தீர்த்தராமன், திருவள்ளூர் தொகுதிக்கு துணைத் தலைவர் இதயதுல்லா மற்றும் துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ., ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com