காஷ்மீரில் பி.டி.பி. வேட்பாளர்கள் அறிவிப்பு.. அனந்த்நாக் தொகுதியில் மெகபூபா போட்டி


காஷ்மீரில் பி.டி.பி. வேட்பாளர்கள் அறிவிப்பு.. அனந்த்நாக் தொகுதியில் மெகபூபா போட்டி
x

ஜம்மு பிராந்தியத்தில் உள்ள உதம்பூர் மற்றும் ஜம்மு ஆகிய மக்களவை தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு பி.டி.பி. ஆதரவு அளிக்கும் என மெகபூபா முப்தி தெரிவித்தார்.

ஸ்ரீநகர்:

நாடாளுமன்றத் தேர்தலுக்கான இந்தியா கூட்டணியில் ஜம்மு-காஷ்மீருக்கான தொகுதி பங்கீட்டில் சுமுகமான உடன்பாடு எட்டப்படவில்லை. காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள 3 தொகுதிகளிலும் தனித்து வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி.) அறிவித்தன. மற்ற இரண்டு தொகுதிகளையும் காங்கிரசுக்கு விட்டுக்கொடுத்தன.

இந்நிலையில், பி.டி.பி. பாராளுமன்ற குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பாராளுமன்ற குழு தலைவர் சர்தாஜ் மத்னி, பி.டி.பி. கட்சியின் மூன்று வேட்பாளர்களையும் அறிவித்தார்.

அனந்த்நாக் தொகுதியில் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி போட்டியிடுவார் என்று அறிவித்தார். ஸ்ரீநகரில் கட்சியின் இளைஞரணி தலைவர் வாகித் பாராவும், பாரமுல்லாவில் முன்னாள் எம்.பி. மிர் பயாசும் போட்டியிடுவார்கள் என தெரிவித்தார்.

முன்னதாக மெகபூபா முப்தி பேசும்போது, ஜம்முவில் உள்ள உதம்பூர் மற்றும் ஜம்மு ஆகிய மக்களவை தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு பி.டி.பி. ஆதரவு அளிக்கும் என்றார்.


Next Story