முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கை காட்டுபவரே இந்தியாவின் அடுத்த பிரதமர்: அமைச்சர் துரைமுருகன்


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கை காட்டுபவரே இந்தியாவின் அடுத்த பிரதமர்: அமைச்சர் துரைமுருகன்
x

பிரதமர் வருவதால் தமிழகத்தில் மக்களிடம் எந்த மாற்றமும் ஏற்படாது என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

குடியாத்தம்,

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர தி.மு.க. சார்பில் பிச்சனூர் தேரடி பகுதியில் வேலூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.கதிர்ஆனந்தை ஆதரித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் அபார வெற்றி பெறுவோம். அவர்களது கட்சியினருக்கு பிரசாரம் செய்ய வருகிறார். மக்கள் விழிப்புணர்வுடன் உள்ளனர். பிரதமர் வருவதால் தமிழகத்தில் மக்களிடம் எந்த மாற்றமும் ஏற்படாது. தமிழகம் முழுவதும் தி.மு.க. கூட்டணி அலை வீசுகிறது. வடமாநிலங்களிலும் இந்தியா கூட்டணி அலை வீசுகிறது. நிச்சயம் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

பா.ஜனதா தலைவர்கள் பலர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டிருக்கிறார்கள். வேட்டி கட்டியவர் கைகாட்டும் நபர்தான் பிரதமராக வந்து கொண்டுள்ளார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கை காட்டுபவரே இந்தியாவின் அடுத்த பிரதமர்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story