பெரம்பலூர் மாவட்டத்தில் போலீசாருக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது

பெரம்பலூர் மாவட்டத்தில் போலீசாருக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது.
பெரம்பலூர் மாவட்டத்தில் போலீசாருக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது
Published on

பெரம்பலூர்,

தமிழகம், புதுச்சேரியில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெறவுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் (தனி), குன்னம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 652 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வாக்குச்சாவடிகளில் பணிபுரியவுள்ள அரசு அலுவலர்கள், போலீசார், ஊர்க்காவல் படை வீரர்கள், வீடியோ கிராபர்கள் பணியில் ஈடுபடவுள்ளனர். இதில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கும், குன்னம் சட்டமன்ற தொகுதி சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கும் உட்பட்டவையாகும். இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தபால் ஓட்டுகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த வாக்கச்சாவடி அரசு அலுவலர்கள் தங்களது தபால் ஓட்டுகளை செலுத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com