ஒரு கையில் பெரியார்.. மற்றொரு கையில் விநாயகர்- வைரலாகும் வணங்கான் போஸ்டர்

இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘வணங்கான்’. இப்படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார்.
ஒரு கையில் பெரியார்.. மற்றொரு கையில் விநாயகர்- வைரலாகும் வணங்கான் போஸ்டர்
Published on

சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாலா, தற்போது 'வணங்கான்' என்ற படத்தை இயக்கி வருகிறார். அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், சமுத்திரக்கனி, மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, சில்வா இந்த படத்திற்கு ஆக்ஷன் காட்சிகளைக் கையாண்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. அருண் விஜய் ஒரு கையில் பெரியார் மற்றும் இன்னொரு கையில் விநாயகர் வைத்துள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com