விஜய்யின் 'லியோ' திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி

நடிகர் விஜய் நடிப்பில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வெளியாக உள்ள லியோ திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு புதுவை அரசு அனுமதி அளித்துள்ளது.
விஜய்யின் 'லியோ' திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி
Published on

புதுச்சேரி

நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை காண விஜய் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். புதுவையில் உள்ள 15 தியேட்டர்களில் இந்த படம் திரையிடப்பட இருக்கிறது. இந்த திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது.இதைத்தொடர்ந்து லியோ படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக புதுச்சேரி மாவட்ட கலெக்டர் வல்லவன் கூறும்போது, 'லியோ படத்தினை நாளை மறுநாள்  முதல் வருகிற 24-ந் தேதி வரை காலை 7 மணிக்கு சிறப்பு காட்சி திரையிட அனுமதிக்கப்பட்டுள்ளது' என்றார்.

அதாவது, 24-ந் தேதிவரை தினமும் 5 காட்சிகள் திரையிட அனுமதிக்கப்பட்டுள்ளது.சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com