பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர் போக்சோவில் கைது

பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர் போக்சோவில் கைது
Published on

பெரம்பலூர்:

கடலூர் மாவட்டம், விருதாச்சலம் தாலுகா, காந்தி நகரை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 38). இவர் தனது மனைவியுடன் தற்போது பெரம்பலூர் அருகே துறைமங்கலம் பங்களா ஸ்டாப் எதிரே உள்ள நியூ காலனியில் வசித்து வருகிறார். மேலும் ஆனந்தராஜ் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று ஆனந்தராஜ், 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த சிறுமியின் தாய் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆனந்தராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com