பிலிப்ஸ் ஸ்மார்ட் வை-பை கேமரா

பிலிப்ஸ் ஸ்மார்ட் வை-பை கேமரா
Published on

பிலிப்ஸ் நிறுவனம் வீடுகள் மற்றும் வெளி இடங்களில் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் வீடியோ கேமராக்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் செயல்பாட்டை மேம்படுத்த இந்த நிறுவனத்தின் செயலி (ஹோம் சேப்டி ஆப்) உதவியாக உள்ளது. செயற்கை நுண்ணறிவு நுட்பம், எளிதில் பயன்படுத்தும் வகையிலான செயல்பாடு, நீடித்து உழைக்கும் தன்மை ஆகியன இதன் சிறம்பம்சங்களாகும். பொருட்கள் நகர்வு, சப்தம், மனிதர்கள் நடமாட்டம் ஆகியவற்றை துல்லிய மாக பதிவு செய்யும். தவறாக எச்சரிக்கை மணி ஒலிப்பதை இது முற்றிலும் தவிர்க்கும்.

இந்த கேமராவை உங்கள் ஸ்மார்ட்போனுடன் இணைத்து விட்டால் உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் இந்தக் கேமராவில் பதிவாகும் காட்சிகளைப் பார்க்க முடியும். இருவழி தொடர்பு மேற்கொள்ளும் வசதியும் உள்ளது. இதன் கேமராக்கள் 360 டிகிரி கோணத்தில் சுழலும் தன்மை கொண்டவை. ஹெச்.எஸ்.பி 1000 மாடலின் விலை சுமார் ரூ.3,295.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com