14 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்.. விராட் கோலி படைத்த சாதனைகள்!

இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 9,230 ரன்கள் குவித்துள்ளார்.
2011இல் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக முதன்முதலில் டெஸ்டில் களமிறங்கினார் விராட் கோலி.
டெஸ்டில் 68 போட்டிகளில் அணியை வழிநடத்திய கோலி 40 போட்டிகளில் வெற்றி தேடித் தந்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் 30 சதங்கள், 7 இரட்டைச் சதங்கள் அடித்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.
கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக போட்டிகளில் வென்ற இந்திய கேப்டன் என்ற பெருமையை தன்வசம் வைத்துள்ளார் .
இந்திய அணியை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்ற முதல் கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரர்.
ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய கேப்டன் இவர்தான்.
இந்தாண்டு ஆஸி.க்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியே கடைசி போட்டியாக அமைந்தது.
Explore