நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் 7 ஆயுர்வேத பொருட்கள்..!

freepik
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதற்காக 2021-ம் ஆண்டில் பரவலாக பயன்படுத்தப்பட்ட, தொடர்ந்து தற்போது பயன்படுத்தப்படும் 7 ஆயுர்வேத பொருட்கள் குறித்து ஒரு அலசல்.
freepik
ஜிலோய்: ஆங்கிலத்தில் ஜிலோய் என்றும், தமிழில் அமிர்தவல்லி என்றும் இது அழைக்கப்படுகிறது.த்தத்தை சுத்தப்படுத்தவும், நோய்களை உண்டாக்கும் நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போராடவும் இது உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிறந்த ஆயுர்வேத பொருட்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.
இஞ்சி: இதில் நுண்ணுயிர் எதிர்ப்பு, தொற்று எதிர்ப்பு பண்புகள் உள்ளன. உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை மேம்படுத்தக்கூடிய சக்தியையும், புற்றுநோய் தடுப்பு பண்புகளையும் கொண்டது.
metaAI
துளசி : உடலில் உள்ள நச்சுத்தன்மையை திறம்பட நீக்கும். துளசி இலைகளை அப்படியே அரைத்தோ, வேகவைத்து அரைத்தோ சாறு தயாரிக்கலாம். அதனை பருகி வருவது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்.
wiki
ஆம்லா: மலை நெல்லிக்காய், காட்டு நெல்லி என்றும் அழைக்கப்படும். இதில் வைட்டமின் சி மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும் சில பண்புகள் உள்ளன.
wiki
மஞ்சள்: இதில் உள்ள குர்குமின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதோடு உடலில் வெள்ளை பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்கச்செய்யும்.
அதிமதுரம்: முலேத்தி அல்லது லிகோரைஸ் என்றும் அழைக்கப்படும் இது சுவாச ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கக்கூடியது. மேலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யவும் அதிமதுரம் உதவும்.
அஸ்வகந்தா: இது வலி மற்றும் வீக்கத்தைக் குணப்படுத்தவும், தூக்கமின்மை மற்றும் பிற நோய்களை குணப்படுத்தவும் நீண்ட காலமாக பயன்படுத்தப்படுகிறது. மன அழுத்தத்தை போக்கவும் உதவும். இது அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது.
Explore