குழந்தைகளுக்கு பிடித்த சுவை மிகுந்த 'தேங்காய் ஐஸ்கிரீம்'..!

Photo: MetaAI
தேவையான பொருட்கள்: தேங்காய் -1, மில்க்மெய்டு - 1 டின், தண்ணீர் - 4 கப், ஜெலட்டின் - 3 டீஸ்பூன், வெனிலா - 1 தேக்கரண்டி
Photo: MetaAI
செய்முறை: முதலில் ஒரு தேங்காயை எடுத்து அரைக்கவும். அடுத்து, தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து தேங்காயை நன்கு பிழிந்து கொள்ளவும்.
Photo: MetaAI
அதன் பிறகு தேங்காய்த் தூள் போகாதவாறு முதல் தேங்காய்ப் பாலை நன்றாக வடிகட்ட வேண்டும். தொடர்ந்து அதை, மில்க்மெய்டு பாலுடன் கலந்து கரைக்கவும்.
Photo: MetaAI
வெதுவெதுப்பான நீரில் ஜெலட்டினை நன்கு கரைத்து, தேங்காய்ப் பால் கலவையில் சேர்த்து நன்கு கலக்கவும் .
Photo: MetaAI
அடுத்து, கலவை கட்டியாகும் வரை சுமார் நான்கு மணி நேரம் குளிர்பதன பெட்டியில் (பிரிட்ஜ்) வைக்க வேண்டும்.
Photo: MetaAI
பிறகு குளிர்பதன பெட்டியில் இருந்து எடுத்து, பீட்டரால் அடிக்கவும். பின்னர் அதில் சிறிது வெனிலா சேர்க்கவும்.
Photo: MetaAI
கடைசியாக இதை மீண்டும் குளிர்பதன பெட்டியில் வைத்து குளிர வைத்து எடுத்தால், சுவையான தேங்காய் ஐஸ்கிரீம் தயார்.
Photo: MetaAI
Explore