இந்த குறிப்பில் இருக்கும் குளியல் முறைகளை, பதினைந்து வயது முதல் 70 வயது வரை உள்ள அனைத்து பாலினரும் செய்யலாம்.
வெந்தயக் குளியல் : ஒரு கைப்பிடி வெந்தயத்தை முதல் நாள் இரவு ஊற வைத்து மறுநாள் அதை நன்கு மை போல் அரைத்து, தலை முதல் கால்வரை பூசி அரைமணி நேரம் ஊற வைத்து பிறகு குளிக்க வேண்டும்.
கற்றாழைக் குளியல்: கற்றாழையின் மேல் தோலை சீவி விட்டு, அதில் உள்ள சதைப் பகுதியை சுத்தமான தண்ணீரில் அலச வேண்டும். ஏழு அல்லது எட்டு முறை தண்ணீரை மாற்றி அலசும் போது தான், அதில் உள்ள பிசுபிசுப்பு தன்மை குறையும்.
பின்னர் அதை அரைத்து உடலில் தலைமுதல் கால்வரை பூசி 15 நிமிடங்கள் ஊற வைத்த பிறகு குளிக்க வேண்டும்.
நெல்லிக்காய் குளியல்: தேவையான அளவு நெல்லிக்காயை விதை நீக்கி சாறு எடுத்து, தலைமுதல் கால்வரை பூசி 15 நிமிடங்கள் ஊற வைத்த பிறகு குளிக்க வேண்டும்.
நெல்லிக்காய் குளியல் மட்டும் மதியம் 11 முதல் 3 வரை அதாவது சூரிய ஒளி உச்சத்தில் இருக்கும் நேரத்தில் மட்டும் குளித்தல் வேண்டும்.
மேற்கூறிய குளியல் முறைகளால், உடல் சூடு குறைவதை கண்கூடாகக் காணலாம். தலைமுடி உதிர்வது குறையும், மன அழுத்தம் மனபாரம் குறையும்.
தொடர்ச்சியாக வாரம் ஒரு முறை செய்து வந்தால், மேற்கூறிய உடல் உஷ்ணம் சார்ந்த வியாதிகள் வராமல் காக்கும். ஏற்கனவே உடல் சூடு சார்ந்த வியாதிகள் உள்ளவர்களுக்கு வியாதியின் தாக்கம் குறையும்.