அதிர்ச்சியூட்டும் பனி நகரம்..!
குளிர் காலங்களில் சில பகுதிகளில் பனிப்பொழிவு கடுமையாக இருக்கும். பனிக்கட்டிகள் படர்ந்து தரையே தெரியாமல் காட்சி அளிக்கும்.
அப்படி உலகளவில் அதிக பனிப்பொழிவு நிகழும் நகரங்களில் முதன்மையாக இருக்கிறது, அமோரி நகரம்.
ஜப்பானில் உள்ள இந்த நகரத்தில் ஆண்டுதோறும் சராசரியாக 7.9 மீட்டர் பனிப்பொழிவு பதிவாகிறது.
வடகிழக்கு ஆசியாவில் இருந்து வரும் குளிர்ந்த காற்று, ஓயூ மலைத்தொடர் மீது மோதுவதே இத்தகைய கடுமையான பனிப்பொழிவுக்கு காரணமாக அமைந்திருக்கிறது.
மேலும் அகோரி நகரம் ஹக்கோடா மலையின் உயரமான இடத்தில் இருப்பதும் பனிப்பொழிவை அதிகரிக்க செய்துவிடுகிறது.
அங்கு பெரும்பாலும் நவம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையே பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
அங்கு 1945-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அதிகபட்சமாக 82 அங்குலம் பனி படர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வெப்பமான காலங்களில் ஜப்பானில் உள்ள சிறந்த மலையேற்ற இடங்களில் முதன்மையாக விளங்குகிறது அமோரி நகரம்.