ஆசிய கோப்பையின் ஒரு அலசல்.!!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 1984-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும்.
ஆரம்பத்தில் ஆசிய கோப்பை தொடர் 50 ஓவர் வடிவில் நடத்தப்பட்டது. அதன் பிறகு 20 ஓவர் வடிவம் புகுத்தப்பட்டது.
2010-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 268 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு கடைசி 2 பந்தில் 3 ரன் தேவைப்பட்ட போது முகமது அமிர் வீசிய 5-வது பந்தை ஹர்பஜன்சிங் சிக்சர் விளாசியது மறக்க முடியாத ஒரு தருணம்.
இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தனது 100-வது சர்வதேச சதத்தை நிறைவு செய்தது ஆசிய கோப்பை போட்டியில் தான்.
2016-ம் ஆண்டு 20 ஓவர் ஆசிய கிரிக்கெட்டில் இந்திய அணி, பாகிஸ்தானை 83 ரன்னில் சுருட்டி வெற்றி பெற்றதும், அந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர் இந்தியாவின் டாப்-3 பேட்ஸ்மேன்களை ஒரே மாதிரி எல்.பி.டபிள்யூ. செய்ததும் திகைப்பூட்டுவதாக அமைந்தது.
2012-ம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் விராட் கோலி 183 ரன்கள் நொறுக்கினார். ஒரு நாள் போட்டியில் கோலியின் சிறந்த ஸ்கோர் இது தான்.
2008-ம் ஆண்டு கராச்சியில் நடந்த இந்தியாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மென்டிஸ் 8 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா தான் அதிகமாக ஆதிக்கம் செலுத்தியுள்ளது. 8முறை கோப்பையை வென்று இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக இலங்கை 6 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் வென்றுள்ளன.
Explore