metaAI
metaAI

ஆந்திரா ஸ்டைல் சிக்கன் பிரியாணி..!

Published on
தேவையான பொருட்கள் : சிக்கன் - அரை கிலோ, சீரக சம்பா அரிசி - அரை கிலோ, பச்சை மிளகாய் - 8,வெங்காயம் - 2 ,தக்காளி - 2 ,இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், புதினா - ஒரு கட்டு, கொத்தமல்லித்தழை - ஒரு கட்டு ,பால் - கால் லிட்டர், தயிர் - 100 மில்லி, எண்ணெய் - 50 மில்லி,நெய் - 2 டீஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய் - சிறிதளவு உப்பு ஆகியவை
metaAI
செய்முறை : சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும். பாலை நன்றாக காய்ச்சி வைக்கவும். வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி வைக்கவும்.
metaAI
ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும். அரிசியை நன்றாக கழுவி அரை மணி நேரம் ஊறவிடவும்.
metaAI
பாத்திரத்தில் எண்ணெய்விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
metaAI
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இஞ்சி - பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
metaAI
தக்காளி நன்றாக வதங்கியதும் சிக்கன், கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து வதக்கவும்.
metaAI
அடுத்து அதில் தயிர், உப்பு, பால், அரை லிட்டர் தண்ணீர் நன்கு கொதிக்கவிடவும். நன்றாக கொதி வந்தவுடன் அரிசியைச் சேர்த்து வேகவிடவும்.
metaAI
அரிசி பாதியளவு வெந்த பிறகு தம் போட்டு இறக்கவும். கொத்தமல்லித்தழை, புதினா, நெய் சேர்த்து 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
metaAI
பிறகு ராய்த்தாவுடன் பரிமாறவும். சூப்பரான ஆந்திரா ஸ்டைல் பிரியாணி ரெடி.
metaAI

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com