பலா பிஞ்சு சமைத்து சாப்பிடுவதில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?
பலா பிஞ்சைப் பறித்து அதை தோல் சீவி, மற்ற காய்கறிகளைச் சமைப்பது போல கூட்டு செய்து சாப்பிடுவார்கள். லேசான துவர்ப்புடன் இருக்கும் பலா பிஞ்சு ஏராளமான மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது.
பலா பிஞ்சில் புரதச்சத்து, மாவுச்சத்து, நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம், மக்னீசியம், சோடியம், வைட்டமின் சி போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
பலா பிஞ்சு வயிற்றுக் கோளாறு பிரச்சினைகளை போக்கும் தன்மைகளை கொண்டுள்ளது.
பலா பிஞ்சை முறையாக காரம் இல்லாமல் மிளகு, இஞ்சி சேர்த்து சமைத்துச் சாப்பிட ஜீரணம் அதிகரிக்கும்.
பலாக்காயில் வைட்டமின் ஏ நிறைந்து காணப்படுகிறது. இது கண் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.
பலாக்காயில் பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் மிக அதிக அளவில் காணப்படுகின்றன. இவை புற்றுநோய் செல்களைத் அழிக்கும் ஆற்றல் கொண்டவை.
பலாக்காயில் தாமிரச்சத்து அதிகம் உள்ளதால், இதை தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
பலா பிஞ்சில் கிளைசெமிக் குறியீடு மிகவும் குறைவு என்பதால் நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.