எகிப்திய ராணிகள் முதல் இந்திய மகாராணிகள் வரை பயன்படுத்திய அழகு ரகசியங்கள்!
credit: freepik
சரும அழகை பராமரிப்பதற்கு எகிப்திய ராணிகள் முதல் இந்திய மகாராணிகள் வரை பயன்படுத்திய காலத்தால் அழியாத பழங்கால 6 அழகு ரகசியங்கள் குறித்து பார்ப்போமா?
கற்றாழை: பண்டைய கலாசாரம் இதை அழியாத தாவரம் என்று வர்ணித்துள்ளது. இந்த குளிர்ச்சியான ஜெல்லை சருமத்தில் தடவும் போது மாயாஜால மாற்றத்தை உணரவைக்கும்.
credit: freepik
பால் குளியல்: உலக பேரழகியாக திகழ்ந்த கிளியோபாட்ரா இன்று இளம் பெண்கள் விரும்பி உபயோகிக்கும் சீரம் ஆயில் பயன்படுத்திய தில்லை. ஆனால் பாலில் குளிக்கும் வழக்கத்தை தொடர்ந்து பின்பற்றினார். அது சருமத்தை மென்மையாகவும், பொலிவாகவும் உணர வைப்பதாக அறியப்படுகிறது.
credit: freepik
முல்தானி மெட்டி: இது சருமத்தில் படர்ந்திருக்கும் அதிகப்படியான எண்ணெய்யை உறிஞ்சி, சரும துளைகளை சுத்தம் செய்துவிடும். இறுக்கமான, வறண்ட சருமத்திற்கு நிவாரணம் அளிக்கும்.
credit: freepik
ரோஸ் வாட்டர்: இது சருமத்தை குளிர்விக்கக்கூடியது. நீரிழப்பை ஈடு செய்து ஈரப்பதத்தை தக்கவைக்கக்கூடியது. சருமத்திற்கு மென்மையான புத்துணர்ச்சியையும் அளிக்கும். முகலாய ராணிகள் முதல் இல்லத்தரசிகள் வரை விரும்பி பயன்படுத்தி இருக்கிறார்கள்.
credit: freepik
நல்லெண்ணெய்: பழங்காலம் முதலே நல்லெண்ணெய் கொண்டு உடலை மசாஜ் செய்யும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. நல்லெண்ணெய்யை லேசாக சூடுபடுத்தி உடலில் தடவி வரலாம். சரும வறட்சி மட்டுமின்றி மன அழுத்தத்தையும் போக்கக்கூடியது.
credit: freepik
மஞ்சள்: தழும்புகளை மங்க செய்து, பளபளப்பான, தெளிவான முகப்பொலிவை தரும் ஆற்றல் மஞ்சளுக்கு உண்டு. இன்றளவும் சரும பராமரிப்பில் மஞ்சளுக்கு தனி இடம் உள்ளது.