நார்ச்சத்து, கால்சியம், மெக்னீசியம் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாதாம் பிசின் நமது உடலுக்கு பல்வேறு வகையில் நன்மைகளை அளிக்கிறது.
பாதாம் பிசினில் நமது உடலை இயற்கையாகவே குளிர்விக்கும் தன்மைகள் உள்ளன.
கோடைகாலத்தில் சந்திக்கும் மலச்சிக்கல் பிரச்சினையில் இருந்து விடுபட பாதாம் பிசின் சிறந்த தேர்வாகும்.
பாதாம் பிசினில் கால்சியம் அதிகளவு நிறைந்துள்ளது. இது உடலின் ஒட்டுமொத்த எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடும்.
கோடை காலத்தில் நமது சருமம் மிக மோசமான பிரச்சினைகளை சந்திக்கக்கூடும். பாதாம் பசின் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை அளித்து, அதனை மென்மையாக வைத்திருக்க உதவலாம்.
நமது உடலை எப்போதும் நீரேற்றமாக வைத்திருப்பது அவசியமாகிறது. நமது உடலுக்கு போதுமான அளவு நீர்ச்சத்தை பாதாம் பிசின் வழங்குவதாக கூறப்படுகிறது.
இதில் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளது. இது ஆரோக்கியமான எடை இழப்புக்கு வழிவகுக்கிறது.
கர்ப்ப காலத்தில் எலும்பை உறுதிப்படுத்தி, உடலுக்கு வலு கொடுக்கிறது. மேலும் கரு வளர்ச்சிக்கு உதவலாம்.